கோவை, ஜூலை 07 –
கோவை மாவட்டம் இருகூர் L&T பைபாஸ் சுங்கசாவடி பகுதியில் புக்ரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி புதிய மருத்துவமனை மூன்று தளங்களுடன் கைதேர்ந்த அனுபவமிக்க திறமையான மருத்துவர்களையும், செவிலியர்களையும் தேர்வு செய்து மருத்துவமனையை மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ் அவர்கள் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி மருத்துவமனையை திறந்து வைத்தார். திறப்பு விழாவில் புக்ரா சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை நிறுவனர் திரு. V. இராஜேந்திரன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், கொங்கு மண்டல தி.மு.க. பொறுப்பாளரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான V. செந்தில்பாலாஜி, கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர் மற்றும் கோவை மாவட்ட முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.