By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கஞ்சா வழக்கில் கைதான 3 பேர்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கஞ்சா வழக்கில் கைதான 3 பேர்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கனஂனியாகுமரி

கஞ்சா வழக்கில் கைதான 3 பேர்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Last updated: May 27, 2025 12:03 am
May 27, 2025
32 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 25:
குமரி மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைதான மூன்று பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் எஸ். பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கஞ்சா விற்பனை கும்பல் மீதான நடவடிக்கை தீவிரமாகியுள்ளது. ஐந்து மாதங்களில் இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இவர்களில் பட்டதாரிகள், மாணவர்கள், இளம் சிறார்களும் அடங்குவர். கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீதான நடவடிக்கை இன்னும் தீவிர படுத்தப்படும் என எஸ். பி. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முளகுமூடு பகுதியை சேர்ந்த ராஜ் என்பவரின் மகன் அருண் (23), நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் பேச்சியப்பன் (27), கோட்டார் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் முருகன் (44), ஆகியோரை நேசமணி நகர் போலீசார் கைது செய்தனர். கைதான இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். தொடர்ந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் இவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு எஸ். பி. ஸ்டாலின் கலெக்டர் அழகு மீனாவிற்கு பரிந்துரை செய்திருந்தார். இந்த பரிந்துரையின் அடிப்படையில் மேற்கண்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் அழகுமீனா உத்தரவிட்டார். இதையடுத்து அருண் (23), பேச்சியப்பன் (27), மற்றும் முருகன் (44), ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். குமரி மாவட்டத்தில் இதுவரை 14 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் கருத்தரங்கம்
மண்டைக்காடு அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்; 4 பேர் உயிர் தப்பினர்
முன் அறிவிப்பு இன்றி தோவாளை கால்வாய் தண்ணீரை
தைப்பூச பூஜை தொடக்க விழா
தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து வெளியூர் திரும்ப பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

மாவீரர் ஒண்டிவீரனுக்கும் புகழ் அஞ்சலி

August 21, 2024
175 Views
சித்ரா மருது தலைமையில் நடைபெற்றது
மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டம்
பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா
பெண்கள் தினத்தை முன்னிட்டு Saai Social Services சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு கையேடு வெளியீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account