கோவை, ஜூன் 15 –
பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மரியாதை நிமித்தமாக அருள்மிகு சித்தி விநாயகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலின் அறக்கட்டளையின் சார்பாக திருக்கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் அதனை தாங்கள் முன்னெடுத்து சிறப்பாக நடத்திக் கொடுப்பதற்கு அனைத்து ஆன்மீகப் பணிகளையும், சிறப்பான முறையில் செய்து கொடுக்க வேண்டி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
திருக்கோவில் அறக்கட்டளை நிறுவனத் தலைவரும் கே ஆர் சிவதேசிகன் வேளாளர் பிள்ளை மற்றும் அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் பேரவையின் நிறுவனத்தலைவரும் அமைச்சரிடம் வருகின்ற தமிழ்நாடு அரசின் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்றும், மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் உடைய மசோதா முன்னெடுப்பில் எங்களது வேளாளர் வெள்ளாளர் அமைப்புகளின் சார்பாக கொடுக்க இருக்கின்ற கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்ய வேண்டி எங்களது கோரிக்கை மனுவை பேரவையில் உள்ள அனைத்து அமைப்புகளும் நேரில் சந்திக்க உள்ளோம் என்று கூறினர்.
உடன் கோவை வடவள்ளி திருவாளர்கள் வேளாளர் பிள்ளை அறக்கட்டளை ,இணைந்த வடவள்ளி வேளாளர் பிள்ளை நல சங்கத்தின் பொருளாளருமான B சிவகுமார்பிள்ளை உடன் இருந்தனர்.



