கிருஷ்ணகிரி, ஜூலை 15 –
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
முதலாவதாக பெற்றோர்கள் மாணவர்கள் ஊரின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் காமராசர் படத்திற்கு பூக்களை தூவினர். மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி ஓவிய போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. காமராசர் புகழ் பாடும் பாடல்களை பாடி நடனம் ஆடினர். போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் ஷீல்ட் மற்றும் மெடல் வழங்கப்பட்டது. மாணவர்கள் அனைவருக்கும் நோட்டுகள் பேனா பென்சில்கள் வழங்கப்பட்டது.
காமராசர் முகமூடியினை மாணவர்கள் அணிந்து காமராசர் கனவினை நனவாக்குவோம் என உறுதியற்றனர். காமராசர் படம் அடங்கிய ஸ்டிக்கர்களை வீட்டு கதவுகள் பீரோக்களில் ஒட்டிக்கொள்ள மாணவர்களுக்கும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெற்றோர்கள், பொதுமக்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், ஊரின் முக்கிய பிரமுகர்கள் பழனிசாமி, சிவக்குமார் ஆசிரியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.



