By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழந்தை பாலியல் கொலை வழக்கில் போலீஸ் அலட்சியம்! இன்ஸ்பெக்டரை கைது செய்ய வேண்டும்: கொளத்தூர் மணி வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > குழந்தை பாலியல் கொலை வழக்கில் போலீஸ் அலட்சியம்! இன்ஸ்பெக்டரை கைது செய்ய வேண்டும்: கொளத்தூர் மணி வலியுறுத்தல்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

குழந்தை பாலியல் கொலை வழக்கில் போலீஸ் அலட்சியம்! இன்ஸ்பெக்டரை கைது செய்ய வேண்டும்: கொளத்தூர் மணி வலியுறுத்தல்

Last updated: March 18, 2026 6:31 pm
March 18, 2026
42 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, மார்ச் 18 –

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே 2½ வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் போலீஸ் அலட்சியம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குற்றவாளியை உடனடியாக கைது செய்ய தவறிய இன்ஸ்பெக்டர் சுமித்ரா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

அஞ்செட்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சுமித்ரா, ஆரம்பத்திலேயே மருத்துவ அறிக்கையில் பாலியல் பலாத்காரம் மற்றும் சந்தேக மரணம் குறித்த தெளிவான தகவல் கிடைத்தும், அதனை பொருட்படுத்தாமல் அலட்சியமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தாமதமே குற்றவாளிக்கு தப்பிக்க வாய்ப்பளித்ததாக சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கொளத்தூர் மணி மற்றும் சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அவர்கள் தெரிவிக்கையில்: ஒரு குழந்தையின் உயிரை காவு கொண்ட இந்த வழக்கில் அலட்சியம் காட்டிய அதிகாரி மீது வெறும் இடைநீக்கம் போதாது; உடனடியாக குற்றவியல் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் சேசுராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியநாயகம் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, பிப்ரவரி 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். புதிய இன்ஸ்பெக்டர் கந்தவேல் பொறுப்பேற்ற பின்னரே வழக்கில் திருப்பம் ஏற்பட்டதாகவும், அதற்கு முன் நடந்த தாமதம் பல கேள்விகளை எழுப்புவதாகவும் கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இன்ஸ்பெக்டர் சுமித்ரா கடுமையான அலட்சியம் காட்டியதாக உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் சுமித்ரா மீது பாலியல், கொலை, வன்கொடுமை உள்ளிட்ட பிரிவின் வழக்கு பதியவில்லை. ஒரு குழந்தையின் உயிர் போன பின்னரும் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வரும் நிலையில், குழந்தைக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என சமூக அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

விளம்பரம்

You Might Also Like

சென்னை மாநில குடியரசுத் தின அணிவகுப்பு முகாமில் ஸ்ரீ அய்யப்பா மகளிர் கல்லூரி மாணவி ஆர். ஜீவிதா பங்கேற்பு – கௌரவிப்பு விழா
கிரசன்ட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் அறிமுகப்படுத்தும் ரியல் எஸ்டேட் துறைக்கான எம்.பி.ஏ படிப்பு
படந்தாலுமூட்டில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அரசுக்கு சொந்தமான மரத்தை வெட்டி எடுத்து சென்ற நபர்கள்
வடசேரியில் நவீன பஸ் நிலைய பணிக்காக நடைபாதை இடிப்பு: வியாபாரிகள் ஜேசிபி வாகனத்தை சிறைபிடித்து போராட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி ஜூன் 2 முதல் தொடக்கம்: ஆட்சியர் விஷு மகாஜன் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோவில்பட்டிதமிழ்நாடு

கோவில்பட்டியில் சகாராவை தாண்டாத ஒட்டகம் பயிற்சி மையம் சார்பில் பட்டாம்பூச்சி சொன்ன கதை புத்தகத் திறனாய்வு கூட்டம்

June 30, 2026
16 Views
மாநில பொதுச் செயலாளர் சதீஷ் ராஜா ஆசிரியர் தின வாழ்த்து
காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்: நோய் தொற்று பரவும் அபாயம்
உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள்
குமரி போலீஸ்காரரிடம் மாற்று சிறுநீரகம் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி: நர்ஸ் உட்பட 3 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account