சங்கரன்கோவில், ஆகஸ்ட் 26 –
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருக்கள்பட்டியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் முன்னிலை வகித்தார். மாணவ மாணவிகளின் நலன் கருதி வேலை வாய்ப்பு பெறும் வகையில் சட்டமன்றத்தில் ராஜா எம்எல்ஏ முதலமைச்சருக்கும் அமைச்சருக்கும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் அரசு உயர் தொழில் பயிற்சி நிலையம் வேண்டும் என எம்எல்ஏ கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கையை ஏற்கபட்டு தாமதமின்றி கட்டிடங்கள் கட்டப்பட்டு தொழிற்பயிற்சி நிலையம் துவக்கப்பட்டுள்ளது. இதில் சேர்வதற்கு ஆண்களுக்கு 14 வயது முதல் 40 வயது வரையும் பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. இந்த நிலையத்தில் வேளாண்மை பிரிவு ஒரு வருடம், ட்ரோன் பைலட் இளநிலை 6 மாதமும், காற்றாலை தூண்டில் நுட்ப உதவியாளர் பிரிவில் இரண்டு வருடமும், வெல்டர் பிரிவில் ஒரு வருடமும் ஆகிய நான்கு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையத்தில் சேர்வதற்கு எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் ஐடிஐ பிரிவில் சேர்ந்து கொள்ளலாம். ஜாதி சான்றிதழ் ஆதார் அட்டை மற்றும் உரிய ஆவணங்கள் கொண்டு பயிற்சி சேரலாம். பேச்சாளர்களுக்கு ரூபாய் 1000 உதவி தேவை வழங்கப்படும். பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு 9952298236, 9487986393, 9361075445 என்ற தொலைபேசி எண்களின் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியின் போது மாவட்டத் திறன் பயிற்சி உதவி இயக்குனர் கோபிநாத், குருக்கள்பட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் முத்துலட்சுமி, மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் செண்பக விநாயகம், மேல நீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர் மன்ற சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், குருக்கள்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ், துணைத் தலைவர் வேலுச்சாமி, ஒன்றிய குழு உறுப்பினர் அமுதா, கிளைச் செயலாளர் சுகுமாரன், மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், சங்கரன் கோவில் நகர செயலாளர் பிரகாஷ், சிவகிரி பேரூர் செயலாளர் சேது சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், கண்ணன், அரசு அதிகாரிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



