By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளிகளின் வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளிகளின் வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளிகளின் வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

Last updated: May 4, 2024 9:22 am
May 4, 2024
127 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து துறை சார்பாக, தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி ஆகிய நான்கு வட்டாரங்களில் 89 தனியார் பள்ளிகளை சேர்ந்த 490 பள்ளி வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதில், கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் ஆகிய இரண்டு வட்டாரங்களை சேர்ந்த 52 தனியார் பள்ளிகளின் 315 பள்ளி பேருந்துகள் முதல்கட்டமாக பள்ளி வாகனங்கள் சிறப்பு விதிகள் 2012-ன்படி, 22 அம்சங்களுடன் இயக்கப்படுகின்றனவா என பள்ளி ஆய்வு கமிட்டிகளுடன் இன்று ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில், பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, அவசர வழி, வேக கட்டுப்பாடு மற்றும் வாகன ஆவணங்கள் முறையாக பராமரிப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவசர காலங்கள் அல்லது அசாதாரண சூழ்நிலைகளில் மாணவர்கள் உடனடியாக தொடர்புகொள்ள அவசரகால பொத்தான் (Panic Buttons) பள்ளி வாகனங்களில் பொருத்தப்பட வேண்டும். குழந்தைகள் வாகனங்களில் பாதுகாப்பாக ஏறும் பொழுது படிகட்டுகள் மற்றும் தரைதளம் சரியான அளவு இருக்கின்றதா என அளவீடு செய்யப்பட்டது. வாகனங்களில் இருபுறமும் பள்ளிகளின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள், கைபேசி எண்கள் கட்டாயம் எழுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

மேலும், வாகன ஓட்டுநர்கள் தங்களுடைய வாகனத்தை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். தற்பொழுது இவ்வருடாந்திர ஆய்வில் வாகனம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களும் நல்ல முறையில் உள்ளது. போக்குவரத்து துறை சார்பாக, வாகனங்களை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். அவற்றை நன்கு கவனித்து மாணவர்களை பாதுகாப்பாக கொண்டு சேர்க்க வேண்டும்.தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற சாலைகளுக்கு ஏற்றவாறு வாகனத்தை இயக்க வேண்டும். போக்குவரத்து மற்றும் காவல்துறை சார்பாக சாலை விபத்து தடுப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகிறோம். இருந்தாலும், பல்வேறு சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த சாலை விபத்துகளை தடுக்க உங்களுடைய முழு ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. எனவே வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கடந்த ஆண்டு வாகனத்தை இயக்கியது போல இந்த வருடமும் நல்லபடியாகவும், மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்புடனும் பேருந்துகளை இயக்கி மாணவ, மாணவியர்களை பாதுகாப்பாக சேர்க்க வேண்டும். தங்களுடைய ஆரோக்கியத்தையும் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு., அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தீயணைப்பு துறையினர் மூலம் தீ விபத்தின் போது ஓட்டுநர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டதையும், 108 ஆம்புலன்ஸ் குழுவினர்கள் விபத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள் குறித்த செய்முறை விளக்கம் செய்து, ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதை பார்வையிட்டார்.

இவ்வாய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர் .பாபு, கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் .எம்.பி.காளியப்பன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் .ப.ஆனந்தன், .அன்புசெழியன், மாவட்ட கல்வி அலுவலர் .ரமாவதி, தீயணைப்பு துறை நிலைய அலுவலர் .சக்திவேல் மற்றும் தீயணைப்பு துறையினர், 108 ஆம்புலன்ஸ் குழுவினர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

353 வது ஆண்டு மத்ய ஆராதனை விழா
தஞ்சாவூரில் உலக நாட்டுப்புற கலை தின விழா!
வஞ்சூர் கிராமத்தில் தேர் திருவிழா
25 பவுன் நகையுடன் இளம்பெண் திடீர் மாயம் – கணவர் புகார்
106 நபர்கள் பங்கேற்ற கராத்தே மாபெரும் உலக சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அடிப்படை வசதிகள் குறித்து குமரி சிறையில் நீதிபதி, கலெக்டர், எஸ்.பி., ஆய்வு

July 22, 2025
82 Views
நாம் தமிழர் கட்சியினர் மின்விசிறி
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை துவக்கம்
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா தொடக்கம் 19ஆம் தேதி கொடியேற்றம்
வீரமரணமடைந்த வீர்ர்களுக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account