கிருஷ்ணகிரி, அக்.02:
சென்னை கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில், போக்குவரத்துத் துறை சார்பில் “வெற்றிப் பயணம்” திட்டத்தின் கீழ் மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தின் விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தின் விரிவாக்கத்திற்கான பேருந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் மற்றும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் பா.முகுந்தன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, மகளிர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணச்சீட்டுகளையும் வழங்கினர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் மண்டல பொதுமேலாளர் கலைவாணன், துணை மேலாளர் (தொழில்நுட்பம்) முகம்மது கலிமுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



