By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கிருஷ்ணகிரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை

Last updated: September 13, 2025 5:13 pm
September 13, 2025
35 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, செப். 13 –

கிருஷ்ணகிரிக்கு நாளை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2 ஆயிரம் கோடியில் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டி நல உதவிகளை வழங்குகிறார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக காலை 9.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தால் (Thal) விமான ஓடுதளத்தை வந்தடைகிறார். அங்கிருந்து கார் மூலமாக கிருஷ்ணகிரிக்கு வருகிறார். அங்கு சுங்கச்சாவடி அருகில் தி.மு.க.வினர் வரவேற்பு அளிக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் உள்ள ராயக்கோட்டை மேம்பாலம் முதல் அண்ணா சிலை, பெங்களூரு சாலை, 5 ரோடு, சென்னை பை-பாஸ் சாலை வரையில் முதலமைச்சரின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடக்கிறது. இதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ள அரசு விழாவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிறார். அங்கு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்கிறார். அதைத் தொடர்ந்து விழா மேடை அருகில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் பார்வையிடுகிறார்.

தொடர்ந்து விழா மேடைக்கு வந்து அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ்குமார் வரவேற்று பேசுகிறார். தொடர்ந்து அமைச்சர்கள், கலெக்டர் நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து முதலமைச்சர் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து நல உதவிகளை வழங்குகிறார். விழாவில் மாவட்டத்தின் திட்டப்பணிகள் குறித்த குறும்படம் திரையிடப்படுகிறது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேருரையாற்றுகிறார். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் நன்றி கூறுகிறார்.

விழாவை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தே. மதியழகன் இல்லத்திற்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் ஓசூர் சென்று விமானம் மூலமாக சென்னை புறப்பட்டு செல்கிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி முதல் கிருஷ்ணகிரி நகர் முழுவதும் பல இடங்களில் தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் முதலமைச்சர் ரோடுஷோ செல்லும் பாதையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒளிரும் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. முதல்வரின் வருகையால் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கழகத்தினர் கொடி மற்றும் பேனர்கள் வைத்து உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் வழங்கும் பணி
கல்லாவி காவல் நிலையத்திற்கு கேமராக்கள்
முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு விழா
பழுது நீக்கம் செய்யும் பணி மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை
ஊத்தங்கரை அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை

September 25, 2024
54 Views
கன்னியாகுமரி கண்ணாடி கூண்டு பாலம் பராமரிப்பு பணி நிறைவு
மாநகர கிழக்கு பகுதி செயற்குழு கூட்டம்
தென்காசியில் சாலையோர கடைகளை அப்புறப்படுத்த கூறும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்: வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் கண்ணீர்
ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பள்ளி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account