மதுரை, ஜூன் 30 –
மதுரை அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் உண்டியல் திறப்பு. திருக்கோவிலின் துணை ஆணையர்/ செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் தலைமையில் மதுரை கூடலழகர் பெருமாள் திருக்கோயில் உதவி ஆணையர் பிரதீபா, ஆய்வர் சாவித்திரி, திருக்கோவிலின் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், மீனாட்சி பிரியாந்த், அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, திருக்கோவில் கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், அருணா தேவி, பி.ஆர்.ஓ. முருகன்
ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருக்கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டு
எண்ணிக்கை மேற்கண்ட வகையில் பக்தர்களின் காணிக்கையாக ரூபாய் 37,50,637/- ரொக்கமும் மற்றும் தங்கம் 26 கிராம், வெள்ளி 195 கிராம் ஆகியவைகள் கிடைக்கப் பெற்றதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



