நாகர்கோவில், ஜூலை 21 –
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் நேற்று மாவட்ட உயர் கமிட்டி குழு ஆய்வு செய்தது. இதில் மாவட்ட நீதிபதி கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்று ஆய்வு செய்தனர்.
சிறையில் உள்ள கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா? பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் கைதிகளுக்கான சட்ட ஆலோசனைகள் எதுவும் தேவைப்படுகிறதா? என்பது பற்றியும் கேட்டறிந்தனர். சிறையில் இருந்தவாறு கல்வி கற்பதற்கான வசதிகள் எவ்வாறு உள்ளது, கல்வி சம்பந்தமான உதவிகள் தேவையா என்பது பற்றி இதில் ஆய்வு செய்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் ஆய்வுக்கு பின் நீதிபதி, கலெக்டர், எஸ்பி, உள்ளிட்டோர் வெளியே வந்தனர்.