By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சுகிராமம் காவல் நிலைய போலீசார் கூண்டோடு இடமாற்றம்; எஸ்.பி அதிரடி உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சுகிராமம் காவல் நிலைய போலீசார் கூண்டோடு இடமாற்றம்; எஸ்.பி அதிரடி உத்தரவு
கனஂனியாகுமரி

அஞ்சுகிராமம் காவல் நிலைய போலீசார் கூண்டோடு இடமாற்றம்; எஸ்.பி அதிரடி உத்தரவு

Last updated: August 26, 2025 4:16 pm
August 26, 2025
43 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆகஸ்ட் 26 –

அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் உள்ள போலீசார் 7 பேரை ஒரே நாளில் கூண்டோடு இடம் மாற்றி எஸ்பி உத்தரவிட்டுள்ளார். 6 எஸ்.எஸ்.ஐ.க்கள், 1 ஏட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி துணை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அஞ்சுகிராமம் காவல் நிலையம் நெல்லை – குமரி எல்லை பகுதியில் அமைந்துள்ளது. அஞ்சுகிராமம், மயிலாடி, அழகப்பபுரம் உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகள் இந்த காவல் நிலையத்திற்கு உட்பட்டு வருகின்றன. அஞ்சுகிராமம், குமாரபுரம் சோதனை சாவடியும் இந்த காவல் நிலையத்திற்கு உட்பட்டு உள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கனிமங்கள் ஏற்றி வரும் டாரஸ் லாரிகள் இந்த சோதனை சாவடிகளை கடந்துதான் வரவேண்டும். கனிமங்கள் கொண்டுவரும் டாரஸ் லாரிகள், டெம்போக்கள் உள்ளிட்ட வாகனங்களை சோதனைக்கு பின்னரே போலீசார் அனுமதிக்கின்றனர். முறைகேடாக கனிமங்கள் கொண்டுவரும் வாகனங்கள் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு வந்தது.

சமீபத்தில் போலீசார் அதிக கெடுபிடி மற்றும் வசூல் வேட்டை காரணமாக தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதாக அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள டெம்போ டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்தனர். அப்போது எஸ்பி ஸ்டாலினை சந்தித்து பேசிய டெம்போ உரிமையாளர்கள், சங்கத்தினர் அஞ்சுகிராமம் காவல் நிலைய பகுதியில் போலீசார் சிலர் நடத்தும் வசூல் வேட்டைகள் குறித்தும் புகார் கூறி இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி ஸ்டாலின் உறுதி அளித்து இருந்தார். அதன்படி இது தொடர்பாக விசாரணை நடத்த கன்னியாகுமரி டி.எஸ்.பி க்கு உத்தரவிட்டார். மேலும் சமீபத்தில் கோயில் ஆர்ச் பிரச்சனையும் அஞ்சுகிராமம் காவல் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது கோஷ்டி மோதலாக மாறும் நிலை உருவானது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது திடீரென அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் 7 பேர் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ஆவர். ஒருவர் போலீஸ்காரர் ஆவார். இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் சுசீந்திரம், ஈத்தாமொழி, மணவாளக்குறிச்சி, தென்தாமரைகுளம், வெள்ளிச்சந்தை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை எஸ்.பி ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். ஒரே காவல் நிலையத்தில் இருந்து 7 பேர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மதுசூதனப்பெருமாள் கோவில் பங்குனி திருவிழா
மார்த்தாண்டம் அருகே கார் மோதி கணவர் மனைவி படுகாயம்
வேங்கோடு ஏலாவில் வடிகால் அமைக்க கோரி
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
பைங்குளம்: சாலை சீரமைக்கும் பணிகளை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

காணொளி காட்சி வாயிலாக போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி

August 14, 2024
122 Views
அரசு பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் செயின் பறிப்பு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஸ்ரீ மனோன்மணி காயத்திரி அம்பாள் திருக்கோவில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
கே.எம்.சி.ஹெச் மருத்துவ கல்லூரி சார்பில் தடாகத்தில் ஊரக மருத்துவ மையம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account