ஈரோடு, ஜூலை 4 –
அகில இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கத்தின் 77-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு அகில இந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் ஈரோடு கிளை மற்றும் ஈரோடு நடுநகர் அரிமா சங்கம் சார்பில் ரத்ததான முகாம் ஈரோடு சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு தலைவர் பூபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீ பிரதீப் வரவேற்றார்.
இதில் டாக்டர் கருப்பண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை துவங்கி வைத்து பேசினார்.
ஆண்டு விழாவையொட்டி திண்டலில் உள்ள வெங்கடேஸ்வரா வெல்பர் சொசைட்டியில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப் பட்டது. தொடர்ந்து கொடி ஏற்றப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பிறகு நடந்த ரத்த தான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டயக் கணக்காளர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியில் அரிமா தலைவர் ஜெகதீஷ் கிளை மேலாளர் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சக்திவேல் நன்றி கூறினார் .