கிருஷ்ணகிரி, செப். 27 –
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் நேற்று 26/9/2025 வெள்ளிக்கிழமை அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் அகரம் கிராமத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர். பிரேம்குமார் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர். ஷீலா உறுப்பினர்கள் சின்னசாமி, கார்த்திகேயன், ராஜேந்திரன், ஊர் பிரமுகர்கள் கருப்பண்ணன் பெரியண்ணன், எல்.எஸ். ரமணன் ஆசிரியர் ஓய்வு, இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு மாணவத் தொண்டர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். இச்சிறப்பு முகாமிற்கு நாட்டு நல பணி திட்ட அலுவலர் செந்தில் ஏற்பாடு செய்திருந்தார். உதவி திட்ட அலுவலர் நாகராஜன் நன்றியுரை கூறினார். இம்முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் கிராம மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



