திருவள்ளூர், ஜூலை 04 –
திருவள்ளூர் அடுத்த வதட்டூர் கிராமத்தில் அருள் பாளித்து வரும் அருள்மிகு திரௌபதியம்மன் ஆலய நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த ஜூன் 30-ம் தேதி பந்தக்கால்,
கோ பூஜை, மஹா கணபதி ஹோமம், மஹாலஷ்மி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாஹுதி, கணபதி பூஜை, புண்யாகவாசனம், வாஸ்து ஹோமம், பிரவேச பலி, கும்ப அலங்காரம், அங்குரார்ப்பனம் ரக்ஷாபந்தனம், வேதிகா அர்ச்சனை முதல் கால யாக பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கணபதி பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகாவ்ய பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணஹூதி பிரசாதம் வழங்குதல், கரிகோல ஊர்வலம், கணபதி பூஜை, புண்யாகவாசனம், சோம கும்ப பூஜை, நாடிசந்தானம், அஷ்ட பந்தனம் சாற்றுதல், விக்ர சிலைகள் மற்றும் கோபுர கலசம் பிரதிஷ்டை, மூன்றாம் கால யாக பூஜை, பூர்ணஹுதி பிரசாதம் வழங்குதல், விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜை, தத்துவார்சன ஸ்பர்ஷா ஹுதி கலச பூஜை, நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை கலசம் புறப்பாடாகி கும்ப கலசங்கள், ஆலய பிரதட்சனம், விமானம் மற்றும் மூலவர், ஸ்ரீ திரௌபதியம்மனுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்பொழுது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் வதட்டூர் கிராமம் மக்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.
திரௌபதி அம்மனுக்கு மகா அபிஷேகம் மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.