நாகர்கோவில், அக்டோபர் 6 –
தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 2021ம் ஆண்டிற்கு பிறகு ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தவணை தவறிய நகைக்கடன்கள் ஏலம் விடப்பட்டதில் ஏற்பட்ட நஷ்டத்தை செயலாளர்கள் தலையில் சுமத்தி ஓய்வு கால நிதி பயன்களில் பிடித்தம் செய்யப்பட்டு வருவது கைவிடப்பட்டு, பிடித்தம் செய்த தொகையை திருப்பி வழங்க வேண்டும் என்பது உட்பட 25 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் செயலாளர் கிருஷ்ணன் தலைமை வைத்தார். மற்றும் நிர்வாகிகள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட நிறைவில், கோரிக்கைகள் அடங்கிய மனு கலெக்டரிடம் வழங்கப்பட்டது.


