ராமநாதபுரம், ஆக. 11 –
ராமநாதபுரம் மாவட்ட டேக்வாண்டோ போட்டி தேவிபட்டினம் அருகில் உள்ள ஏ பி சி கேன் பிரிட்ஜ் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து 115 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
தேவிபட்டினம் ஏசியா குரூப் பவுண்டர் அண்ட் சேர்மன் திருப்பதி தலைமையில் ராமநாதபுரம் மாவட்டம் டேக்வாண்டோ தற்காப்பு கலை தலைவர் முருகநாதன், மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார், துணை தலைவர் ரஜினிகாந்த், பொருளாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பயிற்சியாளர் விமல் சண்முகநாதன் மற்றும் சக்தி முருகன் ஆகியோர் இணைந்து இந்த போட்டியை துவக்கி வைத்தனர்.
போட்டியில் முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் செப்டம்பர் மாதம் திருவாரூரில் நடக்க இருக்கும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பரிசளிப்பில் சித்தார் கோட்டை ஊராட்சியின் முன்னாள் தலைவர் முஸ்தரிஜஹான் முகமது ரைசுதீன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கமர்தீன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.



