திருப்பூர், மார்ச் 31 –
திருப்பூரில் இந்திய மருத்துவ சங்கத்தின் நியூ திருப்பூர் கிளை ஆலோசனை கூட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கத்தில் ஐ.எம்.ஏ. நியூ திருப்பூர் தலைவர் ஸ்ரீசரண் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் ஸ்ரீதர் சிறப்பு விருந்தினராக விருந்தினராக கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசுகையில்: இந்திய மருத்துவ சங்கத்தில் இந்தியா முழுவதும் 10 லட்சம் டாக்டர்களும், தமிழ்நாட்டில் மட்டும் 184 கிளைகளும், அதில் 2 லட்சம் டாக்டர்களும் உள்ளனர் என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஏராளமான டாக்டர்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளனர்.
இதற்கு சங்கத்தின் சார்பில் நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்வதாகவும் நுகர்வோர் சட்டத்தில் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, மருத்துவமனை வாரிய சட்டத்தில் உள்ள சில சரத்துக்களை நீக்க வேண்டும் என்றும் மருத்துவமனைகளுக்கான மின்கட்டணம் தற்போது வணிக பிரிவில் இருப்பதால் அதை சிறு, குறு தொழில் பிரிவில் மாற்ற வேண்டும். மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான டாக்டர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.



