மயிலாடுதுறை, அக். 29 –
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயற்கை விவசாயி மாப்படுகை இராமலிங்கம் அளித்த மனுவில் இந்த ஆண்டு தாளடி நடவு செய்த பயிர்கள் கடந்த 18,19,20 ஆகிய தேதிகளில் நடவு செய்த பயிர்கள் மழையால் அழுகிவிட்டது. அதை உடனே அரசு கணக்கெடுப்பு செய்ய வேண்டும்.
சம்பாவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு அறிவித்த 62 கோடியை விடுவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், மாப்படுகை வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பெருமளவு மோசடி நடைபெறுவதை தடுக்க கோரியும் மனு அளித்தார். ஆனால் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி விவசாயி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.



