மங்கலம், பிப். 17 –
மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அக்ரஹாரப்புத்தூர் பகுதியில் ஒரு உயர்மின் கோபுர விளக்கு மற்றும் சின்னப்புத்தூர் பகுதியில் ஒரு உயர்மின் கோபுர விளக்கு என மொத்தம் 2 மின்கோபுர விளக்குகள் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு திருப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மங்கலம் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாநில விவசாய அணி துணை செயலாளரும், பல்லடம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான கே.பி.பரமசிவம், சிறுபான்மைபிரிவு மாநில துணைச்செயலாளர் மாவட்ட செயலாளர் சிராஜ்தீன், அஸ்கர் அலி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் பாலசுப்பிரமணியம், மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் துணைத்தலைவர் முத்துக்குமார், மங்கலம் முத்துச்சாமி ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஜெயம் என். மகேந்திரகுமார், திருப்பூர் மேற்கு மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் நந்தகுமார், வேட்டுவபாளையம் கிளை செயலாளர் ஆனந்த், ரபிதீன், நாசர்அலி, பத்மநாபன், சுந்தர மூர்த்தி, அஜீத் கோவிந்தன், லாரன்ஸ், கோவிந்தசாமி, துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



