கிருஷ்ணகிரி, ஜூன் 29 –
பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோவானது சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து த.வெ.க அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டமானது, திமுக கழகத்தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்ற எதிா்கட்சி தலைவரும், கழக இளைஞா் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், கி௫ஷ்ணகிாி கிழக்கு மாவட்ட கழக செயலாளா் தே.மதியழகன், மாணவா் அணி செயலாளா் ஈரோடு வீரமணி, ஆகியோரின் வழிகாட்டுதலின்படி கழக மாணவர் அணியின் சார்பில் தமிழக வெற்றி கழக அரசின் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார் பொதுவெளியில் போதைப்பொருள் பயன்படுத்தியதை கண்டித்து, கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் மாணவரணி அமைப்பாளர் ஜெய் என்கிற ஜெயேந்திரன் டி.சி.ஆர் தினேஷ்ராஜன், தலைமையில் நடைபெற்றது.
“அமைச்சர் சரத்குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்”, “தமிழக அரசு இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும்” என்று முழக்கங்களை எழுப்பி, அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் பாத்தகோட்டா சீனிவாசன், மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஒய்.பிரகாஷ், கிருஷ்ணகிரி நகர செயலாளரான அஸ்லாம் ரகுமான் ஷெரிப், வேலுமணி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் நாராயணன், தனசேகரன், தேங்காய் சுப்பிரமணி, சரவணன், மூன்றம்பட்டி குமரேசன், ரஜினி செல்வம், எக்கூர் செல்வம், வசந்தரசு, செந்தில், சாந்த மூர்த்தி, இளையராஜா, கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாணவரணி துணை அமைப்பாளர்கள் கௌதம், ராமச்சந்திரன், ஹரிகரன், உமாபதி, சத்யராஜ், ஒன்றிய கழக துணை செயலாளர் ஜெயச்சந்திர பாண்டியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மோகன், மாணவரணி அமைப்பாளர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்கள், உள்ளிட்ட ஏராளமான திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



