கன்னியாகுமரி, செப்.11.
கன்னியாகுமரி மாவட்டம் ஆறுகாணி அருகே ஒருநூறாம்வயல் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கிற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக புகார் எழுந்துள்ளது. இதில் பைக் சேதமடைந்த நிலையில், சம்பவம் தொடர்பாக ஆறுகாணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஒருநூறாம்வயலைச் சேர்ந்த சுனில்குமார் (50), நேற்று இரவு தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்தபோது நள்ளிரவில் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது பைக்கிற்கு தீ வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அருகிலிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி சுனில்குமார் புகார் அளித்துள்ளார். ஆறுகாணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



