கமுதி, ஜூன் 5 –
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பெருநாளி அருகே துத்தி நத்தம் கிராமத்தில் சித்தர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. விஷமுறிவு சித்தர் சித்தையா சாமிகளுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. சித்தையரசித்தர் விஷகடி ஏற்பட்டவர்கள் வந்தால் மிளகு கொடுத்து விஷமுறிவு ஏற்படுத்துவாராம். இந்த கிராமத்தில் பாம்புமணிதர்களின் கண்களுக்கு புலப்படாதாம். பல்வேறு கிராமங்களிலிருந்து வந்து விஷகடி முறிவுக்கு வைத்தியம் செய்துகொள்கிறார்கள் சித்தரின் வாரிசுகள் இப்போது அந்த பணியை தொடர்ந்து செய்துவருகிறரர்கள்ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வரும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு ஏற்பாடு செய்தல், வரும் வாகனங்களை எந்தவிதமான நெரிசலும் இல்லாமல் நிறுத்துதல், பக்தர்கள் தேவை அறிந்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
நிர்வாக தலைவர் CSR. சோலைசாமி தலைமை வகித்தார். மற்றும் சிறப்பு அழைப்பாளராக சிவ சித்து குருமூர்த்தி, சென்னை தொழில் அதிபர்கள் சித்தையா கவுண்டர், சித்துசங்கர்வேலு கலந்து கொண்டனர். மேலும் செந்தூர் பாண்டி, விஜயராம், மூர்த்தி, மாரிச்சாமி, மருத்துவர் பரத் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பூசாரி ராமசாமி கவுண்டர் நன்றி தெரிவித்தார்.



