புதுக்கடை, ஆக. 3 –
கன்னியாகுமரி மாவட்ட பாரதீய விஸ்வகர்மா கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்க செயற்குழு கூட்டம் முஞ்சிறை ஒன்றிய பி எம் எஸ் அலுவலகத்தில் வைத்து சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் அருள் கணபதி முன்னிலை வகித்தார். சங்க பாடலை சங்க நிர்வாக குழு உறுப்பினர் ஜெகநாதராஜ் பாடினார். இணை செயலாளர் தர்மராஜ் வரவேற்றார். நிர்வாக குழு உறுப்பினர்கள் அமிர்தராஜ், சுபின் மற்றும் சிறப்பு அழைப்பாளராக மாநில தொழிற்சங்க பேரவை பொருளாளர் தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் வாழ்வாதார நலன் கருதி கட்டுமான தொழிலுக்கு தேவையான மணல், சிமெண்ட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இன்றி நியாயமான விலையில் கிடைக்கவும், மணல் குவாரிகள் மற்றும் கல்குவாரிகள் அரசு ஏற்று நடத்தி கட்டுமான பொருட்கள் குறைந்த விலையில் கிடைத்திட கேட்டும், சிமெண்ட் கம்பி போன்ற கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த கேட்டும், கட்டுமான தொழிலாளர்கள் கட்டுமான பணிக்கு செல்லும்போதும், சென்று திரும்பும் போதும் ஏற்படும் விபத்தில் மரணம் அடைந்தால் ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கிட அரசை கேட்டும், நலவாரிய ஓய்வூதியம் பெற்று வந்த தொழிலாளர்களுக்கு நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் வழங்கிட அரசை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கத் துணைத் தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார்.