By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
கனஂனியாகுமரி

குமரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

Last updated: July 7, 2025 4:26 pm
July 7, 2025
51 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 7 –

குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு கிழக்கு தாறாவிளையை சேர்ந்தவர் ராபின்சன். இவருடைய மகள் ஜெபிலா (வயது 26), பி.எஸ்சி. நர்சிங் முடித்துள்ளார். இவரும் இனயம் சின்னத்துறையை சேர்ந்த மரிய டேவிட் மகன் நிதின் ராஜ் (26) என்பவரும் காதலித்து வந்தனர். நிதின்ராஜ் பி.இ. படித்துள்ளார்.

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் ஜெபிலாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், காதல் ஜோடி திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி திருமணம் நடந்தது. தொடர்ந்து பெண் வீட்டார் சார்பில் மேல்மிடாலம் கூண்டுவாஞ்சேரியில் புதிய வீடு கட்டி கொடுத்தனர். அந்த வீட்டில் ஜெபிலாவும், நிதின் ராஜும் குடும்பம் நடத்தி வந்தனர். நிதின் ராஜ் பி.இ. படித்திருந்த நிலையில் சரியான வேலை இல்லாமல் இருந்தார். மேலும் வெளிநாடு செல்வதாக கூறி வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே சிறு சிறு குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் ஜெபிலாவின் பெற்றோருக்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவருடைய உடல் கருங்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நிதின்ராஜின் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே ஜெபிலாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். அங்கு மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இது குறித்து தகவல் அறிந்த கருங்கல் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஜெபிலாவின் தாயார் புஷ்பலதா கருங்கல் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தனது மகளின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஜெபிலாவின் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் போலீசார் ஜெபிலா எழுதிய டைரியை கைப்பற்றினர். அதில் தன் சாவுக்கு தனது கணவரோ அவருடைய குடும்பத்தாரோ காரணம் இல்லை என எழுதப்பட்டிருந்தது.
இதனை ஜெபிலாவின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களிடம் போலீசார் காண்பித்து விளக்கிக் கூறியதால் பல மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

விளம்பரம்

You Might Also Like

அதிகமாக கனிமவளம் ஏற்றி வந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு
கன்னியாகுமரி மாவட்ட கோவில்கள் பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
ஃபாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளருக்கு வெட்டு
நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் பொன்னப்ப நாடார் சிலை அமைக்கும் பணி துவக்கம்
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

தேனி மெயின் ரோட்டில் முடக்குச்சாலை

September 9, 2024
97 Views
சால்வை அணிவித்து வாழ்த்துக்கள்
ஸ்ரீ வாழவந்த அம்மன் திருக்கோயில்மகா கும்பாபிஷேகம்‌
அரசு தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவரின் அலவ நிலை
மத்திய சிறையில் சிறப்பு இருதய மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account