புதுக்கடை, மே 7 –
புதுக்கடை அருகே உள்ள முஞ்சிறை பகுதியை சேர்ந்தவர் வில்சன் என்பவரது மகள் வின்சி (20). இவர் மார்த்தாண்டத்திலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஏ 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு செல்லும்போது மார்த்தாண்டம் அருகே கழுவந்திட்டை பகுதியைச் சேர்ந்த ஜெபிஷ்ராஜ் (30) என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜெபிஷ் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
பழக்கத்தின் இடையே மாணவியிடம் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி 13 பவுன் தங்க நகைகளை வாங்கி மோசடி செய்துள்ளார். பின்னர் மாணவிக்கு அந்த நகைகளை திருப்பி வழங்கவில்லை என்று தெரிகிறது.
இது குறித்து மாணவி வின்சி புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி ஜெபிஷ் ராஜ் மீது வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.


