கன்னியாகுமரி அக் : 09
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் 58-வது பிறந்தநாளை முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் மணவாளக்குறிச்சி சந்திப்பில் உள்ள பாப்புலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதயவியல், நரம்பியல், பொது மருத்துவம், மகளிர் நலம், பல் மருத்துவம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் தோல் நோய்களுக்கான மருத்துவ ஆலோசனைகளும், ஈசிஜி பரிசோதனையும் இலவசமாக வழங்கப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இம்முகாம் கன்னியாகுமரி மாவட்ட பாமக செயலாளர் அலெக்சாண்டர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.



