சிவகங்கை | செப்.17:
சிவகங்கை மாவட்ட பாஜக தொழில்பிரிவு மாவட்ட அமைப்பாளர் முத்துராமன் இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் பாண்டித்துரை தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட நிர்வாகிகள், முக்கிய நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மண்டலத் தலைவர்கள் மற்றும் பல்வேறு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் பாஜக நிர்வாகிகளிடையேயான ஒற்றுமை மற்றும் அன்பான உறவு வெளிப்பட்டது.



