By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 215 முகாம்கள் நடைபெறும் – மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 215 முகாம்கள் நடைபெறும் – மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 215 முகாம்கள் நடைபெறும் – மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி

Last updated: July 14, 2025 5:50 pm
July 14, 2025
47 Views
Share
SHARE

சிவகங்கை, ஜுலை 14 –

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்படவுள்ள ”உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கு ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி செய்தியாளர்கள் சந்திப்பு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்: சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 15.07.2025 முதல் செப்டம்பர் 2025 வரை ஒவ்வொரு வாரமும் நான்கு நாட்களில் நாள் ஒன்றுக்கு 6 முகாம் வீதம் மொத்தம் 215 முகாம்கள் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இதில் காரைக்குடி மாநகராட்சியில் 27 முகாம்களும், சிவகங்கை, தேவகோட்டை, மானாமதுரை ஆகிய நகராட்சிகளில் 31 முகாம்களும், 11 பேரூராட்சிகளில் 22 முகாம்களும், 12 சாதாரண ஊராட்சிகளில் 129 முகாம்களும், 3 புறநகர் ஊராட்சிகளில் 6 முகாம்களும் என ஆக மொத்தம் 215 முகாம்கள் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. மேலும், இம்முகாம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன்னார்வலர்கள் மூலம் கடந்த 07.07.2025 அன்று முதல் துண்டு பிரசுரம் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களின் வாயிலாக நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் அந்தந்த துறைகளால் சேவைகள் வழங்கப்படும். அதில் நகர்புறங்களில் நடத்தப்படும் முகாம்களில் 13 துறைகளின் மூலம் 43 சேவைகளும், கிராமப்புறங்களில் நடத்தப்படும் முகாம்களில் 15 துறைகளின் மூலம் 46 சேவைகளும் வழங்கப்படவுள்ளது.

இதில் சொத்துவரி, குடிநீர் வசதி உரிமங்கள் மற்றும் அனுமதி, கழிவு நீர் இணைப்பு, அடிப்படை வசதிகள், பராமரிப்பு, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், காலி மனைவரி, தெரு வியாபாரி அடையாள அட்டை, சொத்து வரி பெயர் மாற்றம் மற்றும் கட்டிட அனுமதி பெறுவதற்கான விண்ணப்பம் ஆகியவைகள் நகர்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் வாயிலாக வழங்கப்படவுள்ளது. மேலும், பட்டாவில் பெயர் மாற்றம் மற்றும் பட்டா பெயர் திருத்தம், பட்டா சிட்டா நகல், பிறப்பு, இறப்பு சான்று வாரிசு சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட மனுக்களுக்கு இம்முகாமில் உடனடி தீர்வு காணப்படும்.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் மனு அளிக்க விடுபட்ட தகுதியுள்ள பயனாளிகள், இம்முகாம்களில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு மனு அளிக்கலாம்.
இச்சேவைகளை பொதுமக்கள் பெறும் பொருட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வருகின்ற 15.07.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டமானது தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பிரதிநிதிகள் வாயிலாக முகாம்கள் தொடங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் எஸ். புதூர் ஊராட்சி ஒன்றிய வராப்பூர் சமுதாயக் கூடத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை தொடங்கி வைக்கவுள்ளார்.

மேற்கண்ட தினத்தன்று காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்: 9,10 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கென கழனிவாசல் முத்துகிருஷ்ணா மஹாலிலும், சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்: 23,24,25,26,27 ஆகிய பகுதிகளுக்கென மாஸா மஹாலிலும், மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்: 1,2,3 ஆகிய பகுதிகளுக்கென அனுசியா மஹாலிலும், தேவகோட்டை நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்:1,2,11 ஆகிய பகுதிகளுக்கென சொர்ணமுத்து மஹாலிலும், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கென பருத்திக்கண்மாய் ஏ.எஸ்.கார்டன் மஹாலிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் பொதுமக்கள் தங்களின் விண்ணப்பங்களை எவ்வித இடையூறுமின்றி அளிப்பதற்கு ஏதுவாக அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாமிலும் இ-சேவை மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதிகள் ஆகியவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கப்படும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் மீது காலதாமதமின்றி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பயன்களும் உடனடியாக வழங்கப்படும். பரிசீலனைக்குட்படுத்தப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .

எனவே, இம்முகாமினை முறையாக பயன்படுத்திக் கொண்டு தாங்கள் வசிக்கும் பகுதியில் முகாம் நடைபெறும் நாளில் உரிய ஆவணங்களுடன் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தெரிவித்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ். செல்வசுரபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜி. அரவிந்த், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துக்கழுவன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அனீஷ் சத்தார் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் கல்வி கடன் விழிப்புணர்வு வகுப்பு
ஆட்சியரிடம் மனுக் கொடுத்த அறக்கட்டளை நிர்வாகி
திருப்புவனம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடியதாக இரண்டு இளம் சிறார்கள் கைது
கல்லல் நடராஜபுரத்தில் ராமாயி நினைவு தொடக்கப்பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்
திமுக நிர்வாகி டி.ஆர்.பி ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி -யிடம் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் அதிரடி

February 16, 2025
78 Views
கரும்பாட்டூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
புதிய பாரத எழுத்தறிவு திட்டம்
ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஒதுக்கி தந்து பள்ளி வளர்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account