திருப்பூர், ஜூன் 29 –
திருப்பூர் தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் பல்சமயநட்புறவு கழகம் மாவட்ட மகளிர் அணி தலைவி மேகலா தலைமையில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் 𝗦.பாலமுருகன் அவர்களை சந்தித்து முதல் சட்டமன்றத் தொடர் சிறப்பாக நடைபெற்றதற்கு
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் தலைவர் ஷாஜகான், மாவட்ட பொறுப்பாளர் அக்கீம், மாவட்ட பொருளாளர் செல்வகுமார், மாவட்ட இளைஞரணி தலைவர் உசேன், மாவட்ட துணைச் செயலாளர் அர்ஷத் அலி, மாநகர வர்த்தக அணி பொறுப்பாளர் தங்ராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சித்ரா, திருப்பூர் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பழனிசாமி, திருப்பூர் தெற்கு இளைஞரணி பிரம்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.



