பரமக்குடி, மார்ச் 5 –
தேசிய தர மதிப்பீட்டில் “பி” தகுதி பெற்ற முதல் நிலை கல்லூரியான பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில், இன்று 25 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் இராஜா தலைமை வகித்தார்.
சென்னை சார் பிட்டி தியாகராய செட்டி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் குழு உறுப்பினர் முனைவர் சக்திவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்கலைக்கழக அளவில் தர மதிப்பெண்களை பெற்ற மின்னணுவியல் துறை இளநிலை 4, முதுகலை 3, தொழில் நிர்வாகவியல் முதுகலை 5, இளநிலை 1, வணிகவியல் கூட்டுறவு செயலாண்மை துறையில் 2,
வேதியியல் துறையில் முதுகலை 3, உயிர் வேதியியல்ல் துறையில் முதுகலை 1 என 20
மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, 2024 -25 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தால் பட்டம் பெறுவதற்கு தகுதியான இளநிலை பாடத்தில் 421 மாணவ மாணவிகளும், முதுகலை பாடத்தில் 151 மாணவ மாணவிகள் என சுமார் 572 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில்: மாணவர்கள் சாதனையாளர்கள் விடா முயற்சி அர்ப்பணிப்பு உங்களை உயர்த்தியுள்ளது. மாணவர்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். தோல்வியை சந்தித்தால் தான் வெற்றியை பெற முடியும். உழைப்பு விடாமுயற்சி என்பது வெற்றியைத் தரும் என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மூத்த பேராசிரியர் சிவக்குமார், துறை தலைவர்கள் அறிவழகன், ரேணுகாதேவி, கண்ணன், மும்தாஜ் பேகம், விஜயகுமார், மோகன கிருஷ்ணவேணி உள்ளிட்ட கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.



