தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொதுச் சங்கங்களில் முதன்மையான சங்கமாக விளங்கும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மற்றும் அதில் இணைந்துள்ள இணைப்புச் சங்கங்கள், சார்பு கூட்டமைப்புகள் மற்றும் தோழமைச் சங்கங்கள் சார்பாக கீழ்க்கண்ட கோரிக்கையை 28.7.2026 தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவரும் அனைத்து துறை சங்கங்களையும் கூட்டமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமான மகேந்திர குமார் முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது ஆளுகின்ற தமிழக வெற்றிக்கழக அரசின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த உடனே 2% அகவிலைப்படி உயர்த்தியது, தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் இடைக்கால நிவாரணமாக விதிமுறைகள் வகுத்தது, சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த ஓய்வூதிய அரசாணைகளை பிறப்பித்தது, டாஸ்மார்க் பணியாளர்களுக்கு 25% ஊதிய உயர்வு அளித்தது அனைத்து துறைகளிலும் சீரமைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.



