களியக்காவிளை, ஜூலை 8 –
களியக்காவிளை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை பகுதியான படந்தாலுமூட்டில் மாவட்டத்தில் பிரபலமான கன்று காலி மார்க்கெட் உள்ளது. இதன் அருகில் சாலையோரம் பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழைத் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த மழைத் தண்ணீரில் சாக்கடை கழிவு நீரும் கலந்துள்ளது. ஆகவே தண்ணீர் மாசுபட்டுள்ளது.
சாக்கடை கழிவு நீர் மற்றும் மழைத் தண்ணீரும் சேர்த்து துர் நாற்றம் வீசுகிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர் கேடு அடைந்துள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி பள்ளத்தினை சீரமைத்து மழைத்தண்ணீர் தேங்காமல் உரிய நடவடிக்கையை சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் எடுக்க அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.



