சேலம் அக் : 13
ஏற்காட்டை பசுமையான, தூய்மையான சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலாத் தலமாக உருவாக்கும் நோக்கில், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தலைமையில், ரோட்டரி கிளப் சேலம் சிட்டி மற்றும் ஏற்காடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் “பசுமை ஏற்காடு” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பைகள், கண்ணாடி மற்றும் உலோக பாட்டில்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு 1,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன், நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



