ராஜாக்கமங்கலம், செப். 3:
ராஜாக்கமங்கலம் அருகே மறுகால்தலைவிளை பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் புதிய நூலகம் கட்டப்பட்டு, திறப்பு விழாவும் நிறைவடைந்தது. இந்நிலையில், பருத்திவிளை பகுதியில் செயல்பட்டு வரும் ரிக்கி மருத்துவமனை சார்பில் நூலகத்திற்கு 43 அங்குல ஸ்மார்ட் எல்.சி.டி. தொலைக்காட்சி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
தொலைக்காட்சியை 45-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சதீஷ் பெற்றுக்கொண்டார். நூலக வளாகத்தில் கண்காணிப்பு கேமரா (சி.சி.டி.வி.) கண்காணிப்பிற்காக இந்த எல்.சி.டி. தொலைக்காட்சி பயன்படுத்தப்பட உள்ளது.



