ஓசூர், ஜூன் 17 –
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் அவ்லியா அல்லாஹ் ஹஸ்ரத் யாரப் தர்காவில் சந்தன குட உருஸ் திருவிழாவின் தொடக்கமாக அலமே-ஷரிப் கொடியேற்று விழா சந்தன குட திருவிழா ஊர்வலம் கமிட்டித் தலைவர் முஜாமில் பாஷா தலைமையில் செயலாளர் மகபூப் கான் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் முதாசிர் பாஷா, தில்லு ஷரிப், கலிம் பேக், சையத் அப்சல், முகமது ஜாபர் ஷரிப், சையத் பாசில், சுபான் உல்லா, முகமது சுல்தான் முன்னிலையில் சந்தன குட கொடியேற்று திருவிழா ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பின்பு தர்காவில் சந்தன பூச்சு மற்றும் கொடியேற்றப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு தேன்கனிக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்த்ராஜ் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக பாதுகாப்பு வழங்கப்பட்டது. மேலும் தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் சாவித்திரி மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் நாகராஜ், சிற்றரசன், கார்த்திக் மற்றும் பலர் இந்த கொடியேற்று திருவிழாவிற்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கினார்கள்.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மூன்று மாநிலங்களில் இருந்து பொதுமக்கள் இந்த கொடியேற்று விழா மற்றும் கொடியேற்று திருவிழா ஊர்வலத்தில் கலந்துக் கொண்டனர். மேலும் வருகைப் புரிந்த பொது மக்களுக்கு யாரப் தர்கா சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு திருவிழாவை சிறப்பித்தனர். மேலும் வருகிற ஜூலை மாதம் 11, 12, 13 தேதியில் யானையின் மீது சந்தன குட உருஸ் திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. விழாவின் ஏற்பாடுகளை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.



