கன்னியாகுமரி, ஜூன் 26 –
கன்னியாகுமரி அடுத்த தென்தாமரை குளம் அருகே நாடான்ஊற்று என்ற பகுதியை சேர்ந்தவர் விபின். இவர் சென்னையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷகீலா (28). ஷகிலா தற்போது தனது மாமியார் புஷ்பம் என்பவருடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் (57) என்ற கூலித் தொழிலாளியுடன் ஷகிலாவிற்கு முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவ தினம் ஷகிலா அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த விஜயகுமார் முன்விரோதத்தை மனதில் வைத்து ஷகிலாவை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இது குறித்து ஷகிலா தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இளம்பெண்ணை திட்டி, கொலை மிரட்டல் விடுத்த விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


