கன்னியாகுமரி, ஆக. 4 –
கன்னியாகுமரி அருகே வடக்கு தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஹரி (55). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ தினம் ஹரி, தாமரைக் குளம் ஆட்டோ ஸ்டாண்டில் வைத்து மதுவில் விஷத்தை கலந்து குடித்துள்ளார். பின்னர் விஷம் குடித்ததை அவரது சகோதரர் சுரேஷ் என்பவரிடம் போன் செய்து தெரிவித்துள்ளார். உடனே சுரேஷ் அவரை தனியார் ஆம்புலன்ஸ் வரவழைத்து ஹரியை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஹரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் தென் தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


