கன்னியாகுமரி அக் : 14
நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் குப்பை கொட்டுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் ஐஸ்வர்யா, இ.ஆ.ப., எச்சரித்துள்ளார்.
குப்பைகளில் கிடைக்கும் ரசீதுகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் குப்பைகளைத் தரம் பிரித்து, மாநகராட்சி நிர்ணயித்த முறையில் ஒப்படைத்து, மாநகரத்தைத் தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும்.



