திருவெண்ணெய்நல்லூர், ஆக 03 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பி.டி.ஓ அலுவலகத்தில் பி.டி.ஓ-வாக இருந்து ஓய்வு பெற்ற ரவி பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பி.டி.ஓ. பாலசுப்பிரமணியம் அனைவரையும் வரவேற்றார். விழாவில் ரவி குடும்பத்தை சேர்ந்த அவரது மனைவி சந்திரகலா மற்றும் மகன் சூர்யா, மகள் காயத்ரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த விழாவில் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ அ.ஜெ. மணிக்கண்ணன், ஒன்றிய சேர்மேன் ஓம்சிவசக்திவேல், மாவட்ட கவுன்சிலர்கள் பி.வி.ஆர். விசுவநாதன், மா. சந்திரசேகரன், கானை சேர்மன் கலைச்செல்வி, துணை பி.டி.ஓ பிரபாகரன், ராமச்சந்திரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பி.டி.ஒ. ரவி நன்றி கூறினார்.