திருவெண்ணெய்நல்லூர், ஆக. 20 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருள் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் வழக்கறிஞர் மனோகரன் சிறப்பான ஏற்பாடுகளை செய்து திருவெண்ணெய்நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உண்டு உறைவிட பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மழையம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தக்கா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, காந்திநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் மொத்தம் 1849 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா உள்ளிட்ட எழுது பொருள் உபகரணங்களை வழங்கினார்.
முன்னதாக திருமாவளவன் பிறந்தநாளையொட்டி காந்திநகரில் கடந்த 16-ந் தேதி மாபெரும் இரத்ததான முகாமும், 17-ந் தேதி 100க்கும் பெண்களுக்கு சேலையும், 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் காசிநாதன், சேவல் மணி, மகேந்திரன், பத்மநாபன், சிவகுரு, பிரபுதேவா, சரவணன், பிரேம்குமார், வல்லரசு, சர்மா, விநாயகம் உள்ளிட்ட விசிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



