ராமநாதபுரம், ஜுலை 1 –
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் திருப்பாலைக்குடியில் இளைஞர்கள் தமுமுக மற்றும் மமகவில் இணைத்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் உமர் மற்றும் திருப்பாலைக்குடி ஜலால் ஏற்பாட்டில் தமுமுக மாநில செயலாளர் சாதிக்பாட்சா, மமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி, மாவட்ட பொருளாளர் ஹசன், மமக மாவட்ட துணைச் செயலாளர் கவுன்சிலர் பெரியசாமி, மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் பஹ்ருல்லா, தொண்டி பேரூர் தலைவர் காதர் ஆகியோர் முன்னிலையில் 30 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை தமுமுக மற்றும் மமகவில் இணைத்துக் கொண்டனர்.
இணைந்த இளைஞர்களுக்கு தமுமுக மற்றும் மமகவின் சேவைகள் குறித்தும் ஒன்றிய பாசிக அரசால் இஸ்லாமியர்களுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்தும் தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா விரிவாக விளக்கினார். பின்னர் வரும் ஜூலை 6 மதுரையில் நடைபெற உள்ள பேரணி மாநாட்டிற்கு அதிகளவில் குடும்பத்துடன் பங்குபெற அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்வில் திருப்பாலைக்குடி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். ஜலால் நன்றி கூறினார்.