திருப்பத்தூர், ஜூலை 7 –
திருப்பத்தூர் மாவட்டம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழ்நாட்டில் வேளாண் உரிமை மின்சார இணைப்பு பெற்றிருக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுதோறும் சராசரியாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் மின் கட்டணம் செலுத்துவதை 20 ஆண்டுகள் தொடர்ந்து போராடி 59 உயிர்களை தியாகம் செய்த உழவர்களுக்கு வீர வணக்கம் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் குறித்த பேரணி நடைபெற்றது. திருப்பத்தூர் சிவராஜ் லாட்ஜ் அருகே துவங்கி புதிய பேருந்து நிலையம் சென்று வட்டாட்சியர் அலுவலகம் வரை ஐநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக சென்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, மாநில தலைவர் சண்முக சுந்தரம், மாநில பொதுச்செயலாளர் முத்து விஸ்வநாதன் ஆகியோர் வழிகாட்டுதலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் வடிவேல் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட அவைத் தலைவர் லட்சுமணன், மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன், மாவட்ட அமைப்பு செயலாளர் ரவிந்திரன் சுப்பரமணியன், மாவட்ட இணை செயலாளர் அருள் கணேஷ், மாவட்ட பொருளாளர் மகேந்திரன், கொள்கை பரப்பு செயலாளர் முனுசாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் முனைவர் செ. ரஜினி, மாவட்ட துணை செயலாளர்கள் சக்தி, பிரகாஷ், பிரேமா பிரகாஷ், உதயகுமார், முனைவர் திருநங்கை ஈஸ்வரி, கோபி, முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் தலைமையில் நமது உரிமைக்காக போராடி வீர மரணம் அடைந்த வீர உழவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி மாநில அரசிற்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி தொடர்பாளர் முனைவர் செ. ரஜினி அனைவரையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார். கோரிக்கைகளான: விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு 50% ஆதார விலை தர வேண்டும். விவசாயிகளின் வங்கி சேமிப்பு கணக்கு எண் சிபில் ஸ்கோர் கட்டுப்பாட்டை நீக்கி கடன் வழங்க வேண்டும். பூந்தோட்ட மின் இணைப்புகள் அனைத்தும் இலவசமாக வழங்கிட வேண்டும். மத்திய அரசு அண்டுதோறும் வழங்கும் ரூ.6000/- வழங்கி வரும் நிதி உதவி திட்டத்தினை குத்தகை விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.
தெலுங்கானா அரசு போல் ஏக்கருக்கு ரூ.20,000 ஆண்டுதோறும் உற்பத்தி மானியமாக விவசாயிகளுக்கும், குத்தகைதாரர்களுக்கும் வழங்கிட வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.4000, கரும்பு டன்னுக்கு ரூ.6000, நிலக்கடலை குவிண்டாலுக்கு ரூ.12000, மாட்டுப்பால் லிட்டருக்கு ரூ.45, எருமைப்பால் லிட்டருக்கு ரூ.65 வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து விவசாய கடன்களுக்கும் சிவில் ரிப்போர்ட் பார்க்கப்படும் என்கிற கொள்கை முடிவு ரத்து செய்ய வேண்டும். தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் பால் உற்பத்தியாளர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் வடிவேல் சுப்பிரமணியன் கோரிக்கைகளை வாசித்தார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் பேரணி மற்றும் கோரிக்கை நோக்க உரையினை விளக்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் முனைவர் திருநங்கை ஈஸ்வரி நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.