திண்டுக்கல், ஆக. 4 –
திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம், திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்கம் இணைந்து திண்டுக்கல் மாவட்ட கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2025-26
பரிசளிப்பு விழா நிகழ்ச்சி திண்டுக்கல் புனித மரியன்னை தொடக்கப்பள்ளியின் பிராஸ்பர் பெட்ரண்ட் பிளாக்கில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கத்தின் தலைவர் Rtn G.சுவாமிநாதன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் லியோ சங்கத்தின் மாவட்ட தலைவர் Ln. A.S.A.சாமி முன்னிலை வகித்தார். இப்போட்டியில் 12 வயது, 14 வயது, 18 வயது என 3 பிரிவின்கிழ் கேரம் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கேரம் சங்க துணைத் தலைவர் புரவலர் Dr.Ln.N.M.B.காஜாமைதீன் கலந்து கொண்டு கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பையை வழங்கினார். இதில் ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி அணியும், பெண்கள் பிரிவில் வத்தலக்குண்டு மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும் பெற்றனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 25க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கத்தின் துணைத் தலைவர் Ln Dr.N.S.A.ஜெய ஆரோக்கிய செல்வன், திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்கத்தின் செயலாளர்
Ln.R. ராமச்சந்திரன், பொருளாளர் Ln. V. மணிகண்டன், மாவட்ட தலைவர் Ln.T.செபஸ்தியார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியை திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்க பொருளாளர் S.மருதமுத்து சிறப்பாக தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கத்தின் செயலாளர் P.ஆல்வின் செல்வக்குமார் நன்றியுரை கூறினார்.