திண்டுக்கல் அக் : 09
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள சமையல் கூடத்தில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு தயாரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி துர்காமூர்த்தி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு தயாரித்து வழங்கப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
மாணவர்களுக்கு காலை உணவு முறையாகத் தயாரிக்கப்பட்டு, உரிய முறையில் அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கப்படுவது தொடர்பான செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.



