மார்த்தாண்டம், ஜூலை 3 –
குமரி மாவட்டத்தில் சிறப்பு மிக்க கோயில்களில் ஒன்றான திக்குறிச்சி, பாறைகுளம் துர்கா நகர் சாமுண்டீஸ்வரி துர்கை அம்மன் கோயில் 29-வது ஆண்டு திருவிழாவும் 12-ம் ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் சமய வகுப்பு ஆண்டு விழா போன்ற நிகழ்ச்சிகள் கடந்த 30 தேதி துவங்கியது. தினமும் கணபதி ஹோமம் உட்பட பல சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மஹா கும்பாபிஷேகம் நேற்று 2-ம் தேதி நடைபெற்றது. இதை முன்னிட்டு ஹோம குண்டத்தில் பூஜிக்கப்பட்ட கலச குடங்களை மேளதாளத்துடன் வேத பண்டிதர்கள் ஊர்வலமாக கோயிலை வலம் வந்து கணபதி, ஈஸ்வர கால பூதத்தான், மந்திரமூர்த்தி, துர்கை, சாமூண்டீஸ்வரி அம்மன் கோயில்களின் கும்ப கலசங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.