பூதப்பாண்டி, மார்ச் 11 –
பூதப்பாண்டியிலுள்ள தோவாளை தாசில்தார் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் மற்றும் லெலினிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் செண்பகராமன்புதூர் சமத்துவபுரம் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் ஐந்து வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்காமல் புதிய நபர்களுக்கு அந்த இடத்தில் பட்டா வழங்கியதாகவும், அதை கேட்ட அந்த குடியிருப்பு வாசிகளை அதிகாரிகள் கொச்சைபடுத்தி பேசியதாகவும், தாலுகாவின் பல இடங்களில் விவசாய நிலங்கள் அதிகாரிகளின் துணையோடு விளைநிலங்களாக மாறியது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் அல் காலத், சி.பி.ஐ.எம்.எல் மணவை கண்ணன், பொருளாளர் தினேஷ், அழகு தர்ம கண் உள்பட பலர் பேசினார்கள்.



