தருமபுரி, ஜூன் 17 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தருமபுரி மாவட்ட அனைத்து நாட்டுப்புற கலைஞர்களின் போதை பழக்க வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வு நடன நிகழ்ச்சிக்கு கலைநன்மணி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கஞ்சா, போதை ஊசிகள், போதை மாத்திரைகள், கள்ளச்சாராயம் உட்பட பல்வேறு போதை பொருட்களை பயன்படுத்தி தனிமனித ஒழுக்க கேட்டால் குடும்ப வன்முறை, ஊர் வன்முறை பொது அமைதிக்கு பங்கம் பெண் குழந்தைகள் வளர இளம் பெண்கள் முதியவர்கள் உள்ளிட்ட பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தல் சட்டம் ஒழுங்கு சீர்கேடு கொலை கொள்ளை ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் மீது எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மிகக் கடுமையான சட்ட திருத்தங்களை செய்ய வேண்டும்.
மேல் முறையீடு இல்லாத அதிகபட்ச தண்டனையை வழங்க வலியுறுத்தி தருமபுரி மாவட்ட அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் பல்வேறு வேடம் அணிந்து நடனமாடியும், பாட்டுப்பாடியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கலைமாமணி கதிர்வேலு நிறுவனர் பாரத வெண்புற இயக்கம் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டனர்.



