தருமபுரி, செப்டம்பர் 15 –
தருமபுரி நகர அதிமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 117- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெரியார் சிலை அருகில் இருந்து அண்ணா சிலை வரை ஊர்வலமாக வந்து அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி, விவசாய அணி தலைவர் அன்பழகன், நகரச் செயலாளர் பூக்கடை ரவி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்ட அமமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட செயலாளர் டி. கே. ராஜேந்திரன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் ஆர். பாலு, கழக ஆட்சி மன்ற தலைவர் ஆர்.ஆர். முருகன், நகரச் செயலாளர் என். பார்த்திபன், முத்துசாமி, சங்கீதா, பழனிசாமி, கணேசன், காளி, வேலாயுதம், ரமேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



