தருமபுரி, ஆகஸ்ட் 20 –
தருமபுரி அண்ணாமலை கவுண்டர் தெருவில் உள்ள ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவிலின் பதினோராம் ஆண்டு துவக்க விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவானது கடந்த மாதம் 24-ம் தேதி ஆடி அமாவாசை அன்று தொடங்கி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மற்றும் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
மேலும் சாமிக்கு வளைகாப்பு, அம்மன் திருவீதி உலா ஊர்வலம், அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், மாவிளக்கு பூஜை, வரலட்சுமி விரதம், குத்துவிளக்கு பூஜை, விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று பதினோராம் ஆண்டு கும்பாபிஷேக துவக்க விழாவை முன்னிட்டு விநாயகர், அம்மன் மற்றும் முருகன் வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தி சாமியை தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை விழா குழுவினர் மற்றும் அண்ணாமலை கவுண்டர் தெரு பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



